Disclaimer: This Blog, its owner, creator & contributor is neither a research analyst nor an Investment Advisor and expressing opinion only as an Investor in Indian equities.He/She is not responsible for any loss arising out of any information,post or opinion appearing on this blog.Investors are advised to do own due diligence and/or consult financial consultant before acting on any such information
Showing posts with label தமிழில் பங்குவர்த்தக செய்திகள். Show all posts
Showing posts with label தமிழில் பங்குவர்த்தக செய்திகள். Show all posts

Tuesday, 25 December 2018

Unknown Success Secrets - Seminar

UNKNOWN SUCCESS SECRETS 


SYLLABUS OF OUR SEMINAR

CANDLES AND MATHS :-

CANDLES
1. Introduction of Candles 
2. Power of Candles
3. Understanding the Wick or Shadow in the candles 
4. Single Candle Patterns - 
5. Double Candle Patterns
6. Triple Candle Patterns
7. Trading with Double Candles
8. Trading with Triple Candles 
9. Support and Resistance 
10. Role of options in intraday 
11. When to trade in intraday 
12. Successful Strategies to trade in INTRADAY and also POSITIONAL 

NUMBERS:-
1. Power of Numbers 
2. Vedic Maths calculations 
3. Gann predictions with indian maths system 
4. Target predictions based on Mathematics
5. Square root numbers and gann square.. 

All these will be the topics covered in our seminars.. 

Seminars happen regularly in our chennai office in weekends. Seminars in chennai will be of two days of theory and one day of live practical 

If u wish to know more or attend our seminar feel free to call us at 7358630109 





Thursday, 5 January 2017

வர்த்தகரின் மனநிலை

வர்த்தகரின் மனநிலை -

தமிழகத்தில் பங்குவர்த்தகம் பொருள் வர்த்தகம் செய்யும் நண்பர்கள் எல்லோரும் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பதே உண்மை.

85 % க்கு மேற்பட்ட நண்பர்கள் எல்லோரும் நஷ்டத்திலே இருக்கிறார்கள். நஷ்டத்துக்கு காரணம் என்னவென பார்த்தால் அறியாமையே ஆகும்.

தொழிலை கற்காமல், பயிற்சி பெறாமல் ஆரம்பிக்கப்படும் ஒரே தொழில் வர்த்தகம் மட்டுமே.

எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டாலும் கவலைப்படாமல் அடுத்த நாள் வர்த்தகத்துக்கு பணம் கொண்டு வரும் நம்மவர்கள் பயிற்சிக்கு செலவு செய்ய ரொம்பவே யோசிக்கிறாங்க....

உங்களை நீங்களே மாற்றிக்கொள்ள பதப்படுத்திகொள்ள பயிற்சி தேவை அதனை கற்றுக்கொள்ள வாருங்கள்

வெற்றி பெறுங்கள்...

இணைந்திடுங்கள் எங்களோடு 7358630109....

Thursday, 28 January 2016

விடா முயற்சி

போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன். வெற்றி பெற்ற எதிரி அரசனை கொல்ல திட்டமிட்டான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் ஈர்த்தது. குகையின் ஒரு பகுதியினுள் ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடி மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? என யோசித்தான்

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.

Thursday, 22 October 2015

பணம்...பணம்....பணம்...

உனது வாயையும் பணப்பையையும் கவனமாகத் திற;அப்போதுதான்
இரண்டிற்கும் நல்ல மதிப்பிருக்கும்.
கடன் என்பது கவனக்குறைவால் ஏற்படும் சுமை.
நல்லவர்கள் எப்போதும் ஏழைகளாக இருப்பார்கள்.
பணத்தின் குவியல் = கவலைகளின் குவியல்
ஏழ்மை பொல்லாதது,அது சிலரைப் பணிவுள்ள மனிதராக மாற்றுகிறது.ஆனால் பலரை தீதும் சூதும் கொண்ட மனிதராக வாழ்ந்து மடியக் காரணமாகின்றது.
எமனுக்கு அஞ்சாத நெஞ்சம் கடன்கொடுத்தவனை நினைத்து அஞ்சும்.
தயவு செய்து எவரிடமும் கடன்படாதீர்கள்.நாயிடம் கடன் பட்டிருந்தால் கூட அதை ‘ஐயா’ என அழைக்கவேண்டியிருக்கும்.
பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம்;இல்லாதவனுக்குக் கவலை.
பணம் நம்மிடம் வரும்போது அதற்கு இரண்டுகால்கள்.நம்மை விட்டுப்போகும் போது அதற்கு பல கால்கள்.
பணத்தை வெறுப்பதாகக்கூறுபவர்கள் வெறுப்பது பிறரது பணத்தைத் தான்!
இன்று நாம் செய்யவேண்டிய காரியம் இரண்டு தான்.
ஒன்று. பணக்காரர்கள் எப்படி உழைக்கிறார்கள் என்பதை ஏழைகள் அறிய வேண்டும்.
இரண்டு. ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை பணக்காரர்கள் அறிய வேண்டும்.
தனிமையும், தான் யாருக்கும் வேண்டப்படாதவராகிவிட்டோமோ என்ற உணர்வும் மிகக் கொடிய வறுமையாகும்.
எவனால் சிரிக்க முடிகிறதோ,அவன் கட்டாயம் ஏழையாக இருக்க மாட்டான்.
நீ பணக்காரனாக வேண்டுமா? நிறைய்ய்ய பணம் புழங்கும் இடத்திற்கு தினமும் ஒருமுறை போய்வருவது உனது கடமைகளில் முதன்மையானதாக இருக்கட்டும்.அடுத்தசில வருடங்களில் உனது இடத்தில் பணம் ஒரு ஊற்றாக பெருக்கெடுக்கும்.
குறிப்பிட்ட அளவுக்கு பணம் சேர்க்கும் வரைதான் அதை நாம் பாதுகாக்க வேண்டியிருக்கும்.அதன் பிறகு, அது நம்மையும், தன்னையும் பாதுகாத்துக்கொள்ளும்;கூடவே தன்னையே பல மடங்கு பெருக்கிக் கொண்டே செல்லும்.இது அனுபவ உண்மை.

வர்த்தகம் என்பது.......

வர்த்தகத்திற்கும், நுகர்வோருக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தப்பின், பங்குச்சந்தையிலும், மற்ற முதலீட்டு வகைகளிலும் எப்படி நுகர்வு பண்பும், வர்த்தக பண்பும் இணைத்திருக்கின்றது என்பதைப் பார்ப்போம் . .
பங்குச்சந்தையுடன் ஒத்த மற்ற முதலீடுகள் - வங்கி வைப்பு, ரியல் எஸ்டேட், தங்கம் மற்றும் தங்க ஆபரணங்கள், அரசு மற்றும் தனியார் பாண்டுகள்; இங்கு பங்குச்சந்தை என நாம் பொருள் கொள்வது எல்லா வகை ஆன்லைன் வர்த்தககங்களையும் சேர்த்துத்தான் (பங்கு, கமாடிட்டி மற்றும் கரன்சி).

பங்குச்சந்தையில், பங்குமுதலீடு (நுகர்வோர் பண்பு) - பங்குவர்த்தகம் என இருப்பிரிவு உண்டு, பங்குமுதலீட்டுக்கான வருவாய் எனப் பார்க்கும்போது பங்கின் விலை ஏற்றம் ஒரு கூடுதல் பயனேயன்றி, அதுவே பிரதான நோக்கம் அல்ல. பங்குமுதலீட்டுக்கான வருவாய் என்பது - டிவிடென்ட், போனஸ் போன்ற பங்கின் fundamental basic ஐப் பொறுத்தது. முதலீடு என்பது நுகர்வோர் பண்பு - ஒரு நுகர்வோர் பொருளை வாங்குவது அதன் நீண்டக்கால பயனின் அடிப்படையில் தானே அன்றி, அதனை மறுவிநியோகம் அல்லது மறுவிற்பனை செய்ய அல்ல என்பதை நாம் முன்பே கண்டதை இங்கே மற்றுமொருமுறை கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
பங்குவர்த்தகம் - பங்கின் விலை மாறுப்பாட்டைக் கருத்தில் கொண்டு ஈடுபடும் எல்லா பிற பரிவர்த்தனைகளுமே (Day trading, Swing trading) பங்குவர்த்தகத்தின் கீழேதான் வரும்.(பங்குவர்த்தகர்களிடையேயான வேறுபாட்டை வேறுவொரு பதிவில் பார்ப்போம், அதுவரை short term, long term என எல்லா வகைகளையும் வர்த்தகர் என்றே கொள்வோம்)

இப்படி சொல்வதால் பங்குவர்த்தகத்தின் மேல் எந்தவிதமான பயமோ, நமக்கான தளம் இல்லையென்றோ நெகடிவாக முடிவேடுக்கவேண்டியதில்லை. ஒரு வியாபாரி எவ்வாறு அவரின் வணிகத்தை அன்றாடம் கையாளுகிறாரோ , அதன் அடிப்படையில் பங்குவர்த்தகத்தில் ஈடுபட பழக்கிக்கொண்டால் நாமும் பங்குச்சந்தையில் பணம் பண்ணலாம்.

பங்குச்சந்தையில் ஜெயிற்பதற்கு நாம் சிறந்த ஆய்வாளராக(analyst) இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. பங்குகளை பற்றிய சிறந்த அறிவே பங்குச்சந்தையில் வெற்றிப்பெற உதவும் என்றால், முதலீட்டாளர்களை விட ஆய்வாளர்களே அதிகம் பணம் கண்டவராக இருக்கவேண்டும். ஆனால் உண்மையில் யார் லாபம் ஈட்டுகிறார்கள்?? இது மில்லியன் டாலர் கேள்வியா?? பதில் சொல்வது மிகவும் கடினமா? பங்குச்சந்தையில் பணம் செய்பவர் பெரிய பணமுதலீட்டாளர்ஒ, சிறந்த ஆய்வாளரோ அல்ல.. ஆனால் ஒரு நல்ல வர்த்தகர் கண்டிப்பாக அவர்கள் இருவரையும் விட லாபம் ஈட்டுபவராக இருப்பார்..

இங்கே நாம் மீண்டும் ஒருமுறை நினைவுக்கு கொண்டுவருவோம் - "பங்குச்சந்தையில் நாம் அனைவரும் செய்யும் அடிப்படை தவறு எது என்று?? நாம் அனைவரும் பங்கு - வர்த்தகத்தில் ஈடுபடுகிறோம் ஆனால் ஒரு நுகர்வோரின் மனநிலையோடு.. இப்போது நாம் புரிந்துக்கொள்வோம் ஏன் நமக்கு தனிமனித கட்டுப்பாடு போதனைகள் சந்தையில் கர்ப்பிக்கப்படுகின்றன என்று... முன்னரே சொன்னப்படி பங்குச்சந்தையில் நாம் வர்த்தகர்கள் (வியாபாரிகள்), எனவே நமக்கு வர்த்தகர்களுக்குத் தேவைப்படும் மனோநிலை, மனோப்பக்குவம் தேவைப்படுகிறது"

இப்போது நமக்கு வர்த்தகர் என்றால் யார் என்ற கேள்வியே வந்திருக்கும்? சில உதாரணங்களைப் பார்ப்போம் - விவசாயத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாத ஒரு வர்த்தகர், விவசாயப்பொருளை நுகர்வோரிடம் சேர்ப்பதன் மூலம், மற்ற இருவரையும் விட லாபமடைகிறார். கணினி விற்பவருக்கு கணினியின் தொழில்நுட்ப அறிவு, ஒரு எஞ்சினியரைப் போல இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ரியல் எஸ்டேட் பிசினசில் லாபம் சம்பாரிப்பவர் கூட சிறந்த வர்த்தகரே அன்றி சிறந்த கட்டுமாளர் அல்ல..
இங்கே பங்கு ஆய்வாளரின் அறிவு - விவசாயி மற்றும் எஞ்சினியர் போல தொழில்நுட்ப தொடர்புடையது.. நாம் சிறந்த வர்த்தகர்கள்எனில் ஆய்வாளர்களின் உதவியுடன் எப்படி சிறப்பாக வர்த்தகம் செய்வது என்பதைப் பற்றி யோசிப்போமே அன்றி, நாமும் ஆய்வில் ஈடுபட தேவையில்லை..

மற்ற வணிகங்களிருந்து பங்குச்சந்தை மாறுபட்டது என்பதை இங்கு மறுக்க இயலாது, ( நகை வியாபாரிகள் அனைவரும் ஆன்லைன் கமோடிட்டி வர்த்தகத்தில் ஜெயிப்பதில்லை).. நாம் இங்கே மீண்டும் வலியுறுத்துவது - வர்த்தககர்களின் சில முக்கிய பண்புகளை பின்ப்பற்றுவதேஅன்றி, நிகழ்கால வர்த்தகத்தை அப்படியே செயலாக்குவது அல்ல..

பொறுமை, நிதானம் தவிர ஒரு வர்த்தகரின் மற்றபிற பண்புகளை அலசுவதன் மூலம், பங்குச்சந்தைக்கு ஏற்ற வர்த்தகராக நாம் எவ்வாறு மாற முடியும் என்பதை வரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக பார்க்கலாம். .

Tuesday, 20 October 2015

இழப்பது ஏன்


பங்குச்சந்தையில் பெரும்பாலோனோர் பணத்தை இழப்பது ஏன்?. இந்த பதிவில் புதிதாக ஒன்றும் இல்லை ஏற்கனவே பெரும்பாலானவை முந்தைய பதிவுகளில் சொல்லப்பட்டவைதான். பல்வேறு காரணங்களை இதற்கு சொல்லலாம் என்றாலும் முக்கியமான மூன்று

1. பேராசை
2. நிதானமின்மை
3. அதிகப்படியான ரிஸ்க் எடுத்தல்

பங்குச்சந்தையில் பல்வேறு முறைகளில் பங்குவர்த்தகம் செய்ய முடிந்தாலும் உதாரணத்திற்கு Delivery based trade, Margin trading, Margin Plus trading, F&O , Commodities , Buy today sell tomorrow (BTST) எவை உங்களுக்கு நன்கு தெரியுமோ அவை மட்டுமே செய்ய வேண்டும்.

சில தொலைக்காட்சி சானல்களில் டை கட்டிக்கொண்டு நாங்கதான் சந்தை ஜோசியர்கள் (அனலிஸ்ட்டாம்) என்று ஆருடம் சொல்பவர்களை தவிருங்கள். அடிப்படையில் நல்ல பங்குகளை சந்தை சரிவை பயன்படுத்தி வாங்குங்கள். நீங்கள் வைத்திருக்கும் பங்கை பற்றிய தகவல்களை நிறைய படியுங்கள். அதிர்ஷ்டத்தை நம்பி சந்தைக்கு வராதீர்கள்.

சந்தையில் பணம் சம்பாதிப்பது மிக கடினம் ஆனால் பணத்தை விடுவது மிக எளிது. சந்தையில் வர்த்தகம் செய்யும் எவருக்கும் இந்த உண்மை கண்டிப்பாக தெரியும். உங்களுக்கென ஒரு வழிவகை வகுத்துக்கொண்டு (make a set of rules) அதை கண்டிப்பாக பின்பற்றினால் வெற்றி நிச்சயம்.


"share market is a place where money gets transfers from un-patient people to patient people" - Warren Buffet

Friday, 3 April 2015

வெற்றி ஆரம்பிக்கும் போதே......

நாம் ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் போது வெற்றி மனோபாவத்துடன் ஆரம்பிக்கிறோமா?

'கண்டிப்பாக அப்படித்தான் ஆரம்பிக்கிறோம்..ஆமாம் வெற்றி மனோபாவம் என்றால் என்ன?'  என்று யாராவது கேட்கலாம்.

அவர்களுக்கெல்லாம் நான் இரண்டு வரிகளுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைந்து சொல்ல வருவது என்னவென்றால் அந்த செயல் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற உறுதியான உணர்வு நம் மனதில் ஏற்படுகின்றதல்லவா? அது தான்.

நண்பர்கள் நன்றாக கவனிக்கவும் - நான் உறுதியான உணர்வு என்று தான் சொல்கிறேன். எண்ணம் என்று சொல்லவில்லை.

ஏனென்றால் எண்ணம் என்பது நமது மேல் மட்ட மனதில் தோன்றுவது. உணர்வு என்பது உள்மனதில் ஏற்படுவது. அதற்கு சக்தி அதிகம்!
அந்த சக்தி நம்மை சரியான வழியில் நடத்திச் சென்று நமது குறிக்கோளை அடைய உதவும்.

சும்மா நமது உணர்வு மனதில் அந்த செயலில் ஜெயித்துக் காட்டுவோம் என்று வற்புறுத்தி நாம் நினைக்கலாம்.

ஆனால் சக்தி வாய்ந்த நமது ஆழ்மனக் கிடங்கில் உள்ள நாம் சேர்த்து வைத்த நமது பழைய குப்பைகள் அந்த நம்பிக்கைகளுக்கு எதிரானவையாக இருந்தால் பயனில்லை.
அந்த நீண்ட நாளைய சேமிப்புக்கு தான் சக்தி அதிகம். அவை 'இவரு ஜெயிச்சுருவாரோம்ல...என்ன கொடுமை சார் இது?'  என கேலி செய்யலாம்.

ஆக அந்த குப்பைகளை காலி செய்ய வேண்டும். எதிர்மறை எண்ணங்களை வேரோடு பிடுங்கி களைய வேண்டும். விழிப்புணர்வுடன் இருந்து மேலும் அவை முளைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆழ்மனதில் நன்னம்பிக்கைகளை விதைக்க வேண்டும்.

அந்த நல்ல நம்பிக்கைகள் நமக்கு வெற்றி மனோபாவத்தை ஏற்படுத்தும்.

சாதிக்கும் சக்தியை கொடுக்கும்.

வெற்றி மனோபாவத்துடன் நாம் செயல்பட ஆரம்பித்தோமானால் நமது சாதனைகளுக்கு வானமே எல்லை!!
 

Monday, 30 March 2015

வர்த்தகம் நமக்கு கிடைத்த வரமா - சாபமா

வர்த்தகம் நமக்கு கிடைத்த வரமா - சாபமா

பங்கு வர்த்தகமோ பொருள் வர்த்தகமோ செய்யும் நண்பர்களை கேட்டு பாருங்கள்.

80 சதவீதத்திற்கும் அதிகமான நண்பர்கள் சாபமே என்று சொல்வார்கள். 

15 சதவீதம் வரமுமில்லை சாபமுமில்லை என்பார்கள், 

5 சதவீதம் பேர் மட்டுமே வரம் என்று சொல்வார்கள்





 
அவர்கள் வர்த்தகத்தின் தன்மையினை அறிந்தவர்கள் புரிந்தவர்கள்

நாம் முதலில் அந்த 5 சதவீதம் மக்களோடு இணைவோம் நம்பிக்கை வைப்போம் வெல்வோம்.

சரி யாரால் பிரச்சனை? 

பங்குகளாலா ??
பொருட்களாலா ?? 
இல்லை நாம் இது வரை அறிந்த புரிந்து கொண்ட விஷயங்களாலா??

எல்லாவற்றுக்கும் விடை இல்லை என்பதே ஆகும் 

நாம் பல வகுப்புகளுக்கு சென்றோம் பல இண்டிக்கேட்டர்கள், வரைபடங்களை கற்றுகொண்டோம் இருந்தாலும் நாம் செய்யும் வணிகங்கள் நஷ்டத்தில் தான் முடிகிறதென்றால் அதற்கு யார் காரணம் எது காரணம் என்று யோசித்தீர்களா??

நீங்கள் படித்த விஷயங்கள் கற்று கொண்ட விஷயங்கள், பார்த்த தொலைக்காட்சி நிகழ்வுகள், உங்களுக்கு உதவிகரமாக இருப்பதை காட்டிலும் இக்கட்டான சுழல்களில் உங்களுக்கு பெரிதும் தொல்லை தான் கொடுத்திருக்கிறது என்பது உண்மையே

நஷ்டங்கள் அனைத்துக்கும் காரணம் நீங்களே அன்று வேறு யாருமில்லை 

தவறான வர்த்தகங்கள் நடக்க காரணம் நாமே.

நம்முடைய பேராசை,  பொறுமையின்மை பயம் போன்ற பலவீனங்களே இதற்கு காரணம் 

சாபமாக தோன்ற காரணம் நாம் அதனை அணுகும் முறையே அன்றி வேறு ஒன்றுமில்லை 


சாபத்தினை வரமாக மாற்றும் கலை வேறு எங்குமில்லை 
யாருடுமுமில்லை நம்மிடைமே இருக்கிறது அதனை அறிந்து கொண்டால் வர்த்தகம் நமக்கு பெரிய பலனை தரும் என்பது சத்தியமான உண்மை 


Sunday, 29 March 2015

தோல்வியை வெற்றி கொள்வோம்

தோல்வியை துரத்துவோம்......

 

 

நம் எல்லோருக்குமான ஒரு பிரச்சனை தோல்வி.

ஆயிரம் பழமொழிகள் தோல்வி குறித்து நாம் படித்து கேட்டு இருந்தாலும் தொடர் தோல்விகள் நம்மை துவளவே செய்கிறது என்பதே உண்மை. 

துன்பம் வரும் போது சிரியுங்கள் என சொல்வது எல்லாம் சொல்வதற்கு எளிது செய்யத்தான் கஷ்டமென சொல்கிறீர்களா? ஆம் செய்வதற்கு கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் நாளடைவில் பயிற்சியின் மூலம் எளிதாக தோல்வியினை வெற்றி கொள்ளலாம்.


3 அடியில் தங்கம் 

அமெரிக்காவில் வடக்கு பகுதியில் தங்க புதையல் தேடி மக்கள் அலைந்து கொண்டிருந்த காலம், டெர்பி எனும் நண்பரும் புதையல் தேடி ஓடினார். ஒரு இடத்தில் தங்கசுரங்கத்தினை கண்டார். தம் நண்பர்கள் உறவினர்கள் துணையோடு முதல் வண்டி தங்கத்தினை எடுத்தார் நல்ல லாபம் கிடைத்தது . அடுத்தடுத்த நாட்களும் நன்றாகவே போனது தங்கசுரங்கம் அமைக்க மெஷனரிகளை வாங்கி தொழிலை விரிவு படுத்தினார்.

நாட்கள் நகர்ந்தன ஒரு நாள் அவருடைய தங்க சுரங்கம் வறண்டு போனது . திகைத்து மலைத்து நொந்து போனார். சரி வந்த வரை லாபம் இதெற்கு மேல் தோண்ட வேண்டாமென எண்ணிய அவர் இயந்திரங்களை பாதி விலைக்கு விற்க  முன் வந்தார்

அதனையும் ஒருவர் விலைக்கொடுத்து வாங்கினார். வாங்கியவர் செய்த முதல் வேலை ஒரு நல்ல ஆராய்ச்சியாளரை அழைத்து அந்த இடத்தின் தன்மையை அராய்ந்தார். தங்க இருப்பதை உறுதி செய்து கொண்ட அந்த நபர் மிகவும் கஷ்டப்பட்டு நம்பிக்கையோடு பாடுப்பட்டார்.

டெர்பி விட்டு சென்ற இடத்திலிருந்து 5 அடி தூரத்தில் மிக பெரிய தங்க தாரை ஓட கண்டு பல கோடிகளை அள்ளினார்.

தோல்வி கண்டு ஓடி ஒளிந்த டெர்பியை போல் நீங்களும் ஓடாதீர்கள், வெற்றி மிக மிக அருகில் காத்திருக்கு

தோல்வி மனப்பான்மை விடுத்து வாழ்வில் வெற்றி காண்போம் நண்பர்களே.....

Sunday, 22 March 2015

நிப்டி மேல போகுமா? கீழே வருமா????


இன்றைய நிலையில் எல்லா பங்குவர்த்தகம் செய்யும் நண்பர்கள் மனதிலிருக்கும் மிக பெரிய விடை தெரிய வினா இது ???

நாம் ஏன் அதனை பற்றி கவலைப்பட்டு நம்முடைய உடலையும் உள்ளத்தையும் வருத்திக்கொள்ள வேண்டும் 

அதன் ஓட்டம் இன்று  எந்த பக்கம் என்பதனை அழகாக  அது காட்டுவிட்டுத்தான் பயணிக்கிறது. அந்த பாதையினை கண்டு நாமும் அதனுடன் பயணித்து  நமக்கு வேண்டியதனை எடுத்துக்கொண்டு வந்து விடுவோம். 

நாள் கணக்கில், மாத கணக்கில் அது எங்கே வேண்டுமானாலும் போகட்டும் 
நமக்கென்ன கவலை.

 இப்படி ஒரு கணக்கு போட்டு வர்த்தகம் செய்து பாருங்களேன் நண்பர்களே
நிப்டியில் மட்டும் வர்த்தகம் இப்படி செய்தால்.........

தினமும் நிப்டி 1 லாட்டில் நாம் எடுக்க வேண்டியது 15 பாயிண்டுகள். 2 பாய்ண்டுகள் இதர செலவுக்கு போக நம் கையிலிருக்க வேண்டியது 13 பாயிண்டு. அந்த 13 பாயிண்டு எல்லா நாட்களும் கிடைக்காது நம்முடைய நஷ்டமும் 15 பாயிண்டுகளுக்கு மிக கூடாது 

20 வர்த்தக நாட்கள் ஒரு மாதத்தில்

15 நாட்கள் லாபம்  - 13 பாய்ண்டு *15 *25 = 4875 
5 நாட்கள் நஷ்டம் -  15 பாய்ண்டு *5*25 =    1875

நிகர லாபம்                                                      =    3000

மாதம் 120 பாய்ண்டு நிப்டியில் லாபம் சரியான முறையில் சேர்த்தாலே போதும் வருடத்திற்கு 120 *12 = 1440 பாய்ண்டுகள். 

சின்ன முதலீட்டில் பெரிய லாபம் செய்யலாம் 

ஆனால் நாம் என்ன செய்கிறோமெனில் பிடிவாதம் பிடித்து நாம் செய்ததது தான் சரி மார்க்கெட்டு எங்கே போனாலும் நாம் செய்த இடத்திற்கு நிச்சியம் திரும்புமென இலவு காத்த கிளியாக காத்திருக்கிறோம். காய் பழத்து பஞ்சாகி காற்றி பறந்து விடுகிறது கொலைப்பசியில் நாமும் இந்த காய் புளிக்கும் என வர்த்த்கத்தினை விட்டு ஓடி போகிறோம்.

சரி எப்படி இந்த 15 பாய்ண்டுகள் ஒரு நாளில் சம்பாதிப்பது வெகு சுலபமாக தெரியும் கஷ்டமான வேலை. 

இதனை தொடர் பயிற்சியின் மூலமே அடைய முடியும். முன்னாள் மாலையிலோ அல்லது வாரக்கடைசியிலோ நாம் எவ்வளவு நேரம் பங்குவர்த்தகம் முடிவுகளை எடுப்பதற்கு செலவிடுகிறோம் என்பதனை பொறுத்தே இது சாத்தியம்

வாருங்கள் தினமும் 13 பாய்ண்டுகள் சம்பாதிப்போம் மார்க்கெட் எந்த பக்கம் போனாலும் .....

Friday, 6 March 2015

பங்குவர்த்தகம் செய்வது குற்றமா? போதை பழக்கமா?



மாப்பிள்ளைக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. பீடி, சிகரெட் பிடிக்க மாட்டார்... வெற்றிலை, பீடா பழக்கம் கிடையாது... சீட்டுக் கட்டை கையால்கூடத் தொடமாட்டார்.

இவ்வளவு ஏன், பங்குச் சந்தையில்கூட பணம் போடலைன்னா பார்த்துக்கோங்களேன்!’

இப்படிப்பட்ட பட்டியலில்தான் இருக்கிறது நம் பங்குச் சந்தை... இன்னமும் பலர் பங்குச் சந்தையிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்கள். நீங்களும் அப்படியிருந்தால் இனியாவது மறுங்கள். கவனமாகக் கையாண்டால் நிச்சயமாக அது லாபத்தை அள்ளிக் கொடுக்கும் நல்ல வழிதான். உடனடியாக இல்லாவிட்டாலும் நீண்ட காலத்தில் பங்குச் சந்தை பற்றிய உங்கள் கருத்தை நிச்சயமாக மாற்றிக்கொள்வீர்கள்.

கம்பெனி நாலு விதம்..!

கம்பெனி... கம்பெனினு சொல்றோமே அதிலே நாலுவிதம் இருக்கு. முதல்ல தனி ஆள் சொந்தமாக நடத்துற கம்பெனி. அடுத்து ரெண்டு மூணுபேர் சேர்ந்து நடத்துற பார்ட்னர்ஷிப் கம்பெனி... அடுத்து, கொஞ்ச பேர் கூட்டாச் சேர்ந்து பணம் போட்டு நடத்துற பிரைவேட் லிமிடெட் கம்பெனி. இந்த மூணுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாலாவதா இருக்கற பப்ளிக் லிமிடெட் கம்பெனிதான் நமக்குத் தேவை! ஏன்னா, அந்த கம்பெனிக்கும் நமக்கும் தொடர்பு இருக்கே... பின்னே அந்த பப்ளிக் நாமதானே!

சிம்பிளாச் சொல்லணும்னா பப்ளிக்கா வந்து பல பேரை கூட்டாளியாச் சேர்த்துக்கிட்டு அவங்ககிட்டேயும் பங்கு முதல் வாங்கி தொழில் நடத்தும் கம்பெனிதான் பப்ளிக் லிமிடெட் கம்பெனி. அதுல கூட்டாளியா இருக்கறவங்க பங்குதாரர். அட, நீங்கதாங்க அது!

அதாவது ஒரு கம்பெனியை நடத்துறதுக்குப் பத்து கோடி ரூபா தேவைனு வெச்சுக்கோங்க... அதை கோடி பேர்கிட்டே பத்து பத்து ரூபாயா வாங்கி பணத்தைச் சேர்த்தா அது பப்ளிக் லிமிடெட் கம்பெனி. அந்த கம்பெனியை நடத்தி, அதில் கோடி ரூபா லாபம் வந்ததுன்னா அதை பத்து ரூபாய் கொடுத்த ஆளுக்கு ஒரு ரூபாய் லாபம்னு கணக்கு வெச்சு பிரிச்சுக் கொடுத்திடலாம். இதுதான் பங்குக் கணக்கு.

பங்குச் சந்தைன்னா என்ன?

இப்போ உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்குமே...அந்த கம்பெனியில பத்து ரூபாய் கொடுத்து பங்குதாரர் ஆகலாம்னு எப்படித் தெரிஞ்சுக்கறதுன்னு... அதைக் கூவிக் கூவி விக்கறதுக்குனு சந்தை இருக்கு... நம்ம ஊர் வாரச் சந்தை மாதிரியே... அதுக்குப் பேர்தான் பங்குச் சந்தை..! ஆங்கிலத்தில் ஷேர் மார்க்கெட்.

கம்பெனிகள் எல்லாம், ‘எங்க கம்பெனி பங்குகளை வாங்கிக்கோங்க’னு சந்தையில் கடைவிரிப்பாங்க... வேணுங்கறவங்க பங்குகளை வாங்கி அந்த கம்பெனியில பங்குதாரர் ஆவாங்க... இப்படி பங்குகளை விக்கிற இடம்தான் பங்குச் சந்தை. ‘சரி, இது ஒருநாள் வியாபாரம் தானே..? முதல்ல பங்கை வாங்கிட்டா... அதுக்குப் பிறகு பணம் போட்டவருக்கும் கம்பெனிக்கும்தானே நேரடி பேச்சுவார்த்தை... சந்தைக்கு என்ன வேலை’னு கேக்கத் தோணுதா..

ஐ.பி.ஓ... செகண்டரி சந்தை..!

மேலே சொன்னோமே... கம்பெனிகள் தங்களோட பங்குகளை கடைவிரிக்கும்னு அதுக்குப் பேர்தான் பங்கு வெளியீடு! இங்கிலீஷில் ஐ.பி.ஓ. (இன்ஷியல் பப்ளிக் ஆஃபர்)  சொல்வாங்க. அதாவது, ஒரு கம்பெனி தன்னுடைய தொழிலை விரிவுபடுத்துறதுக்காக பங்குச் சந்தைக்கு வந்து பங்குகளை வெளியிடுவாங்க... இந்த பங்கு விற்பனையை, மெர்ச்சென்ட் பேங்க்கர்ஸ் அப்படிங்குற நிதி நிறுவனங்கள் முன்னாடி நின்னு நடத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நிதி திரட்டிக் கொடுக்கும். ஒரு கம்பெனி பங்கு வெளியிட்டாச்சுன்னா அந்த கம்பெனி சந்தைக்கு வந்தாச்சுனு அர்த்தம்.

இப்படி ஒரு கம்பெனி ஐ.பி.ஓ. வரும்போது அது நல்ல கம்பெனி... நல்ல லாபம் கிடைக்கும்னு நினைச்சு பல பேர் அந்த பங்குகளை அடிச்சுப் பிடிச்சு வாங்கிடுறாங்கனு வச்சுக்கோங்க... அப்படின்னா சிலருக்கு அந்தப் பங்கு கிடைக்காமப் போயிடும் இல்லையா? ஆனா, அவங்க வாங்கறதுக்கும் ஒரு வாய்ப்பு வரும். அதுக்கு செகண்டரி மார்க்கெட் அதாவது இரண்டாம் நிலை சந்தைனு பேரு!

ஐ.பி.ஓ-.வுல வாங்காதவங்க அதுக்குப் பிறகு இந்த செகண்டரி மார்க்கெட்டுல வாங்கிக்கலாம். ஐ.பி.ஓ.-வில பங்குகளை வாங்கினவங்க அந்தப் பங்குகள் வேண்டாம்னு நினைச்சோ அல்லது நல்ல டிமாண்ட் இருக்கிறதால லாபத்துக்கு வித்துடலாம்னு நினைச்சோ விற்க முன்வருவாங்க. அந்த சமயத்துல அந்த பங்குகளை மத்தவங்க வாங்கிக்கிடலாம். ஆனா, ஒரு வித்தியாசம்... ஐ.பி.ஓ-.விலே கம்பெனி நிர்ணயம் செஞ்ச விலைக்குப் பங்கு கிடைக்கும். ஆனா, செகண்டரி மார்க்கெட்டுல எந்த விலைக்கு விற்க விரும்பறாங்களோ அந்த விலை கொடுத்துதான் வாங்கணும். பத்து ரூபாய் பங்குன்னா பத்து ரூபாய்தானே இருக்கணும். அது எப்படி அதிகமாகும்னு நினைக்கிறீங்களா..?

நாம பசுமாடு ஒண்ணை பத்தாயிரம் ரூபாய்க்கு ஒருத்தர்கிட்ட வாங்குறோம். வாங்கின பிறகு நாம எதிர்பார்த்ததை விட அது அதிகமா பால் கறக்குதுனு வச்சுக்குவோம்... இப்போ அந்த மாட்டை விற்க நினைச்சா அதே பத்தாயிரத்துக்கா விற்போம்? கூடுதல் லாபம் வச்சுதானே விற்போம். அப்படித்தான் நல்ல லாபம் கொடுத்தா... பங்கோட மதிப்பும் சந்தையில கூடும். பத்து ரூபாய்க்கு வாங்கின பங்கு நூறு ரூபாய்க்குகூட போகும்!

ஐ.பி.ஓ.&வுல கம்பெனி நிர்ணயம் பண்ணின விலைக்குத்தான் பங்கு கிடைக்கும்னு முதல்ல பார்த்தோமே... அந்த காலமும் இப்போ மலை-யேறிடுச்சு. முன்ன-யெல்லாம் பத்து ரூபாய் மதிப்-புள்ள பங்குகளை ஒரு கம்பெனி வெளியிடு-துன்னா, அந்த பத்து ரூபாய்க்கே வாங்கலாம். ஆனா, இப்போ பிரீமியம் ரேட்டுங்கற பேர்ல ஐம்பது மடங்கு, நூறு மடங்கு அதிகமாத்தான் கம்பெனியே விலை நிர்ணயம் பண்ணுது.

இப்போ ஒரு விஷயம் புரிஞ்சிருக்குமே... பங்குச் சந்தைக்கு வர்ற கம்பெனிகள்ல நல்ல திறமையான கம்பெனியோட பங்குகளை வாங்கினா, அது நமக்கு நல்ல லாபத்தைச் சம்பாதிச்சுக் குடுக்கும்.

தவறாக பயன்படுத்திய கத்தி

அனைவருக்கும் வணக்கம் .

இந்த கத்தி - காய்கறி வெட்டவும் உதவும் ஆளை கொல்லவும் செய்யும் நாம் அதனை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதனை பொருத்து.
WEBSITE உருவாக்கத்தின் நோக்கம் , MARKET-ல் உள்ளே நுழைந்து எதையும் கற்றுக்கொள்ளாமல் TRADE செய்தவர்களுக்கும் , செய்து கொண்டிருப்பவர்களுக்காக மட்டுமே.

உங்களையே நீங்கள் தொலைத்துவிட்டு தேடும் பகுதி ....... ஆசையில் உள்ளே நுழைந்துவிட்டு உங்களையும் உங்கள் குடும்பத்தின் எதிர் காலத்தையும் நிர்ணயிக்கும் இடம்  தான் ஷேர் மார்க்கெட் !!!!



என்ன இது ஆரம்பத்திலேயே இப்படி சொல்கிறாரே என்று வருத்தப்பட வேண்டாம்... இதுவரை "SHARE MARKET" சென்று TRADE செய்தவர்களின் நிலைமை இது ... 

ஆனால் எவ்வித பயம் இல்லாமல் TRADE  செய்ய நீங்கள் கற்றுகொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. பல பேர் SHARE MARKET-ல் TRADE செய்து எனக்கு LOSS ஆய்டுச்சுன்னு சொல்வாங்க அவர்களிடம் நீங்கள் கேட்கவேண்டியது, "நீங்க SHARE TRADING-ல் இதுவரை என்ன கற்று கொண்டீர்கள் ?, என்று தான். 99 சதவிகிதம் பேர் TV,PAPER,BROKER கொடுக்கும் TIPS-ஐ வைத்துதான் TRADE செய்கிறார்களே தவிர,அவர்கள் சொந்தமாக யோசிப்பது கிடையாது...

இழந்த முதலீட்டை மிக விரைவில் TRADE செய்து எடுக்க நினைப்பது , அவ்வளவு சுலபம் இல்லை.... அதே மாதிரி தன்னுடைய தேவைகளை  கருத்தில் கொண்டும் TRADE செய்யக்கூடாது

நிறைய வழி இருக்கிறது நஷ்ட்டம் இல்லாமல் TRADE செய்ய ........
முதலில் கற்றுக்கொள்ளுங்கள் பிறகு TRADE செய்யலாம்...
ஒன்றே ஒன்றை மட்டும் யோசியுங்கள் "இதில் யார் யார் லாபம் பார்க்கிறார்கள் எப்படி பார்க்கிறார்கள் என்று " அனைவரின் LOSS- யும் ஒரு சிலர் PROFIT ஆக்குகிறார்கள்... அது எப்படி?
எதை எதை கற்றுக்கொள்ளவேண்டும் என்று நாங்கள் சொல்லித்தருகிறோம்(தற்சமயம்  இல்லை )...


F & O -ன் BASIC கூட தெரியாமல் இருக்கும் BROKER -கள்  EQUITY பற்றி கூட  ஒன்றுமே சொல்லாமல் நேரடியாக உங்களை F&O- வில்  TRADE செய்யவைப்பார்கள் . புதிதாய் வரும் TRADERகளுக்கு MARKET RISK-ஐ  புரிய வைக்க இங்கே யாரும் இல்லை. வந்தவரை லாபம் என்று கமிஷனுக்காக இன்று நிறைய BROKER கள் இருக்கின்றனர் ,அதே மாதிரி எப்போதும் BROKERகளையே  குறை  சொல்லகூடாது.. முதலீடு செய்யும் TRADER கள்  தான் யோசிக்க வேண்டும் ....

தன்னால் ஜெயிக்க முடியாது என்று தெரிந்தும் தொடர்ந்து முதலீடு செய்து  கொண்டே போகும் TRADER கள் நிறைய இருக்கின்றனர் ... அவர்கள் இழப்பது முதலீட்டை மட்டுமல்ல வாழ்க்கையையும் தான் ....

வாங்க பங்குசந்தையில் ஈஸியா ஜெயிக்கலாம் என்று கூறி இன்று கிடைச்சதையெல்லாம் விற்று காசாக்க ஒரு  கூட்டமே இருக்கு ... ரொம்ப ரொம்ப கவனத்துடன் இருங்கள் ....

ரோட்டில் இரண்டு பைத்தியகாரர்கள் போய் கொண்டு  இருக்கிறார்கள் , இரண்டு பேரிடமும் கருத்து கேளுங்கள் NIFTY-ன் போக்கை....
ஒருவர் மேலே என்பார்  ஒருவர் கீழே என்பார்  .... ஆக ஏதோ ஒரு பைத்தியம் சொல்வது கண்டிப்பா நடக்கும் ...  யார் வழியில் செல்வது ?

இலட்சத்தில் ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து TRADING-ல் வெற்றியோடு இருப்பார்கள் , அவர்களை கண்டுபிடித்து (கொஞ்சம் சிரமமான வேலைதான் )அவர்கள் வழியில் செல்லுங்கள் ....
தேடுங்கள் விடை கிடைக்கும்


ஆங்கில வார்த்தைகளின் தமிழ் அர்த்தம்

இந்த இணையதளத்தில், பங்குச்சந்தை தொடர்பாக பயன்படுத்தப்பட்ட ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்


இந்த இணையதளத்தில், பங்குச்சந்தை தொடர்பாக பயன்படுத்தப்பட்ட ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்.
In English
தமிழில்
Accumulated Loss
மொத்த நட்டம்
AMC
.எம்.சி
Applications
விண்ணப்பங்கள்
Assets
சொத்து
Association of Mutual Funds in India(AMFI)
.எம்.எப்.
BEAR
கரடி
Bombay Stock Exchange (BSE)
மும்பை பங்குச்சந்தை
Bond
பத்திரங்கள்
Brokerage/Commission
கட்டணம்
BULL
காளை
Buy/Buying/Purchasing
வாங்குவது
Capital
மொத்த முதலீடு
Capital Appreciation
முதலீட்டின் பெருக்கம்
Credit Card
கடண் அட்டை
Cycle
சுழற்சி
Debentures
கடண் பத்திரங்கள்
Debt
கடண்
Delist
டீ-லிஸ்ட் - பட்டியலிருந்து நீக்குவது.
Demat Account
டிமேட் கணக்கு
Depreciation
தேய்மானம்
Discount
தள்ளுபடி
Dividend
டிவிடண்ட்
Earnings Per Share (EPS)
ஒரு பங்குக்கு பெற்ற வருமானம்
Entry Load
பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யும் பொழுது வசூலிக்கப்படும் கட்டணம்
Exit Load
பரஸ்பர நிதிகளில் அலகுகளை விற்க்கும் பொழுது வசூலிக்கப்படும் கட்டணம்.
Face Value
முகப்பு விலை
Fixed Deposits
நிரந்தர வைப்பு நிதி
Folio
போலியோ எண்
Foreign Institutional Investors (FII)
வெளி நாட்டு நிறுவனங்களின் முதலீடு
Fund Manager
நிதி நிர்வாகி
Gain/Profit
லாபம்
Growth
வளர்ச்சி
வருமான வரி
பணவீக்கம்
Initial Public Offering (IPO)
.பி.
முதலீடுகள்
Investor
முதலீட்டாளர
Kissan Vikas Patra (KVP)
கிஸான் விகாஸ் பத்திரங்கள்
Liquidity
தேவையான போது பணம் எடுத்துக்கொள்வது
List
லிஸ்ட்பட்டியலிடுவது
Load
கட்டணம்
Loss
நட்டம்
Market Value
சந்த விலை
Maturity Period
முதிர்ச்சி காலம்
Mutual Funds
பரஸ்பர நிதிகள்
National Savings Certificate (NSC)
தேசிய சேமிப்பு பத்திரங்கள்
National Stock Exchange (NSE)
தேசிய பங்குச்சந்தை
Net Asset Value (NAV)
என்..வி
NIFTY
நிப்ஃடி - தேசிய பங்குச்சந்தையில கணக்கிடப்படுவது.
NYSE
நியூயார்க் பங்குச்சந்தை
Online Trading
இணைய வர்த்தகம்
Permanent Account Number (PAN)
பாண் அட்டை
Portfolio
போர்ட்போலியோ
Post Office Saving
அஞ்சலக சேமிப்பு கணக்கு
PPF (Public Provident Fund)
பி.பி.எப் - வருமானத்திலிருந்து பிடித்ததில் முதலீடு செய்வது.
Premium
பிரீமியம்
Primary Market
முதன்மைச்சந்தை
Proprietorship
தனியார் வியாபாரம்
Saving
சேமிப்பு
Securities and Exchange Board of India (SEBI)
செ.பி
Secondary Market
வெளிச்சந்தை
Sell / Selling
விற்பத
SENSEX
சென்செக்ஸ் அலகு - மும்பை பங்குச்சந்தையில கணக்கிடப்படுவது
Share holder/Stock holder
பங்குதாரர்
Share Market/Stock Market
பங்குச்சந்தை
Speculation
நிலையற்ற தன்மை
Stock
பங்கு
Stock Broker
பங்குதரகர்
Systematic Investment Plan (SIP)
தவணை முறை
Tax
வரி
Tax Gain scheme
வருமான வரி சேமிப்பு பிளான்கள்
Trader
வர்த்தகர்
Trading
வர்த்தகம்
Units
அலகுகள்
Volatile
ஏற்ற இறக்கமாக இருப்பது