இன்றைய நிலையில் எல்லா பங்குவர்த்தகம் செய்யும் நண்பர்கள் மனதிலிருக்கும் மிக பெரிய விடை தெரிய வினா இது ???
நாம் ஏன் அதனை பற்றி கவலைப்பட்டு நம்முடைய உடலையும் உள்ளத்தையும் வருத்திக்கொள்ள வேண்டும்
அதன் ஓட்டம் இன்று எந்த பக்கம் என்பதனை அழகாக அது காட்டுவிட்டுத்தான் பயணிக்கிறது. அந்த பாதையினை கண்டு நாமும் அதனுடன் பயணித்து நமக்கு வேண்டியதனை எடுத்துக்கொண்டு வந்து விடுவோம்.
நாள் கணக்கில், மாத கணக்கில் அது எங்கே வேண்டுமானாலும் போகட்டும்
நமக்கென்ன கவலை.
இப்படி ஒரு கணக்கு போட்டு வர்த்தகம் செய்து பாருங்களேன் நண்பர்களே
நிப்டியில் மட்டும் வர்த்தகம் இப்படி செய்தால்.........
தினமும் நிப்டி 1 லாட்டில் நாம் எடுக்க வேண்டியது 15 பாயிண்டுகள். 2 பாய்ண்டுகள் இதர செலவுக்கு போக நம் கையிலிருக்க வேண்டியது 13 பாயிண்டு. அந்த 13 பாயிண்டு எல்லா நாட்களும் கிடைக்காது நம்முடைய நஷ்டமும் 15 பாயிண்டுகளுக்கு மிக கூடாது
20 வர்த்தக நாட்கள் ஒரு மாதத்தில்
15 நாட்கள் லாபம் - 13 பாய்ண்டு *15 *25 = 4875
5 நாட்கள் நஷ்டம் - 15 பாய்ண்டு *5*25 = 1875
நிகர லாபம் = 3000
மாதம் 120 பாய்ண்டு நிப்டியில் லாபம் சரியான முறையில் சேர்த்தாலே போதும் வருடத்திற்கு 120 *12 = 1440 பாய்ண்டுகள்.
சின்ன முதலீட்டில் பெரிய லாபம் செய்யலாம்
ஆனால் நாம் என்ன செய்கிறோமெனில் பிடிவாதம் பிடித்து நாம் செய்ததது தான் சரி மார்க்கெட்டு எங்கே போனாலும் நாம் செய்த இடத்திற்கு நிச்சியம் திரும்புமென இலவு காத்த கிளியாக காத்திருக்கிறோம். காய் பழத்து பஞ்சாகி காற்றி பறந்து விடுகிறது கொலைப்பசியில் நாமும் இந்த காய் புளிக்கும் என வர்த்த்கத்தினை விட்டு ஓடி போகிறோம்.
சரி எப்படி இந்த 15 பாய்ண்டுகள் ஒரு நாளில் சம்பாதிப்பது வெகு சுலபமாக தெரியும் கஷ்டமான வேலை.
இதனை தொடர் பயிற்சியின் மூலமே அடைய முடியும். முன்னாள் மாலையிலோ அல்லது வாரக்கடைசியிலோ நாம் எவ்வளவு நேரம் பங்குவர்த்தகம் முடிவுகளை எடுப்பதற்கு செலவிடுகிறோம் என்பதனை பொறுத்தே இது சாத்தியம்
வாருங்கள் தினமும் 13 பாய்ண்டுகள் சம்பாதிப்போம் மார்க்கெட் எந்த பக்கம் போனாலும் .....
No comments:
Post a Comment