வர்த்தகம் நமக்கு கிடைத்த வரமா - சாபமா
பங்கு வர்த்தகமோ பொருள் வர்த்தகமோ செய்யும் நண்பர்களை கேட்டு பாருங்கள்.
80 சதவீதத்திற்கும் அதிகமான நண்பர்கள் சாபமே என்று சொல்வார்கள்.
15 சதவீதம் வரமுமில்லை சாபமுமில்லை என்பார்கள்,
அவர்கள் வர்த்தகத்தின் தன்மையினை அறிந்தவர்கள் புரிந்தவர்கள்
நாம் முதலில் அந்த 5 சதவீதம் மக்களோடு இணைவோம் நம்பிக்கை வைப்போம் வெல்வோம்.
சரி யாரால் பிரச்சனை?
பங்குகளாலா ??
பொருட்களாலா ??
இல்லை நாம் இது வரை அறிந்த புரிந்து கொண்ட விஷயங்களாலா??
எல்லாவற்றுக்கும் விடை இல்லை என்பதே ஆகும்
நாம் பல வகுப்புகளுக்கு சென்றோம் பல இண்டிக்கேட்டர்கள், வரைபடங்களை கற்றுகொண்டோம் இருந்தாலும் நாம் செய்யும் வணிகங்கள் நஷ்டத்தில் தான் முடிகிறதென்றால் அதற்கு யார் காரணம் எது காரணம் என்று யோசித்தீர்களா??
நீங்கள் படித்த விஷயங்கள் கற்று கொண்ட விஷயங்கள், பார்த்த தொலைக்காட்சி நிகழ்வுகள், உங்களுக்கு உதவிகரமாக இருப்பதை காட்டிலும் இக்கட்டான சுழல்களில் உங்களுக்கு பெரிதும் தொல்லை தான் கொடுத்திருக்கிறது என்பது உண்மையே
நஷ்டங்கள் அனைத்துக்கும் காரணம் நீங்களே அன்று வேறு யாருமில்லை
தவறான வர்த்தகங்கள் நடக்க காரணம் நாமே.
நம்முடைய பேராசை, பொறுமையின்மை பயம் போன்ற பலவீனங்களே இதற்கு காரணம்
சாபமாக தோன்ற காரணம் நாம் அதனை அணுகும் முறையே அன்றி வேறு ஒன்றுமில்லை
யாருடுமுமில்லை நம்மிடைமே இருக்கிறது அதனை அறிந்து கொண்டால் வர்த்தகம் நமக்கு பெரிய பலனை தரும் என்பது சத்தியமான உண்மை
No comments:
Post a Comment